---Advertisement---

இது தேறுமா தேவா?…சந்தேகப்பட்ட ரஜினிகாந்த்..சக்கை போடு போட்ட படம்!…

Published on: April 18, 2024
deva rajini
---Advertisement---

பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ் கெய்க்வாட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறிய கதை தமிழ் சினிமா நன்றாக அறிந்த ஒன்றே. கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் இன்று இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார்.

‘பஞ்ச்’ வசனங்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர் இவர். தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை தனது பாடல்கள் மூலமும் தெளிவாக சொல்லிவிடுவார். அதுவும் தனது பட ஓபனிங் சாங்களில் தான் சொல்ல வேண்டிய  கருத்துக்களை தனது ரசிகர்களுக்கு மாஸாக தெரிவித்து வருகிறார் ரஜினி.

பஞ்ச் வசனங்கள், பாடல்களில் கருத்துக்கள் என எப்படி  தனது எண்ணம் திரையில் முழுமையடைய  முக்கியத்துவம் கொடுப்பாரோ, அதே போல அவருடைய படத்தின்  இசைக்கும் அதிக கவனம் காட்டப்படும் .

rajini
rajini

பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்துவார் ரஜினிகாந்த். “படையப்பா”, “அருணாச்சலம்” படங்களில் பின்னனி இசை பந்தாவாக அமைந்திருக்கும். “பாட்ஷா” திரைப்படத்தின்  இசையமைப்பு முடிந்த பிறகு ரஜினிக்கு அதில் முழு திருப்தி கிடைக்கவில்லையாம். அப்பொழுது அவர் தேவாவை போனில் அழைத்து “பாட்ஷா” படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுமா? , பின்னணி இசை தேருமா தேவா? என கேட்டாராம்.

“அண்ணாமலை” பட இசை போல இது நமக்கு மெகா ஹிட் அடிக்குமா? என சந்தேகத்தையும் தேவாவிடம் எழுப்பியுள்ளார் ரஜினிகாந்த். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், இது பத்து “அண்ணாமலை”க்கு சமம் என சொல்லி இருக்கிறார் தேவா.

அவர் சொன்னது போலவே “பாட்ஷா” திரைப்படத்தின் பின்னணி இசை அந்த படத்தினுடைய மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இன்று வரை வலைதள டெம்லேட்களுக்கும் அந்தப் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!