---Advertisement---

பிரபாஸின் ராதே ஸ்யாம் படம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு

Published on: January 5, 2022
---Advertisement---

பொங்கல் வரும் நிலையில் கொரோனாவும் சேர்ந்து வந்து கொண்டிருப்பதால் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். எல்லோரும் விரும்பி கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகைதான் பொங்கல் பண்டிகை.

மற்ற பண்டிகைகள் போல் அல்லாமல் இந்த பண்டிகைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், விளையாட்டு போட்டிகள் நடத்துவது, வித விதமாக படம் பார்ப்பது என மக்கள் கூடி கொண்டாடுவர்.

விதவிதமாக படம் பார்ப்பது என்பது தற்போதைய கொரோனா காலத்தில் இயலாத நிலையாகவே உள்ளது. ஒரு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதே பெரிய விசயமாக உள்ளது.

இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் படம் பொங்கலுக்கு முன்னதாக வெளியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் கட்டுப்பாடுகளால் அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதே போல் ப்ரபாஸ் நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  ராதே ஸ்யாம்  இப்படமும் ஆர் ஆர் ஆர் படம் போல தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம்ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.