பவர் ஸ்டார் வனிதா திருமணம் செய்தது போன்ற புகைப்படங்கள் இரண்டு நாட்களாக இணையதளத்தை கலக்கி வருகின்றன. சிலர் உண்மையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டு விட்டார்களோ என சொல்லும் அளவு உள்ளது.
உண்மையில் திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என பலருக்கு புரியவில்லை.
இதை ஒருவர் உண்மை என நம்பி நடிகை கஸ்தூரியிடம் சென்று கேள்வி கேட்டிருக்கிறார். லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி எல்லாம் எங்க என்ற வகையில் அந்த கேள்வி உள்ளது.
இதை பார்த்த கஸ்தூரி தனது பாணியில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஷப்பா என்னா பொறுப்புணர்ச்சி நம்ம மக்களுக்கு. வனிதாவை பாத்து இன்னொரு கல்யாணம்னு நினைக்கறது சரி… பவர் ஸ்டார் ஐ பாத்ததும் புரியலையா இது எதோ சினிமா ன்னு ? போயி புள்ளகுட்டிங்களை படிக்க வையி மேன்! என கஸ்தூரி கூறியுள்ளார்.
ஷப்பா என்னா பொறுப்புணர்ச்சி நம்ம மக்களுக்கு. வனிதாவை பாத்து இன்னொரு கல்யாணம்னு நினைக்கறது சரி… பவர் ஸ்டார் ஐ பாத்ததும் புரியலையா இது எதோ சினிமா ன்னு ? போயி புள்ளகுட்டிங்களை படிக்க வையி மேன்! https://t.co/ocoaMlF4Sc
— Kasturi (@KasthuriShankar) July 23, 2021









