பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் என அழைக்கப்படுவது திருவண்ணாமலை. இங்கு உள்ள அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள 13 கிமீ தூரத்தையும் சிவமே மலையாக காட்சியளிக்க கூடிய புனித மலைகளையும் சுற்றி வருவது சிறப்பான ஒன்றாகும்.
இந்த கிரிவலப்பாதையை சுற்றி எப்போதும் சித்தர்கள் வலம் வருகிறார்கள் என்பது நம்பிக்கை. இந்த கிரிவலப்பாதையில் கிரிவலம் சுற்றுவதற்காக பக்தர்கள் பவுர்ணமி தோறும் வருவர்.
பவுர்ணமி தோறும் இங்கு கட்டுக்கடங்காத கூட்டம் கிரிவலத்துக்காக வரும்.
கொரோனா காரணமாக திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இன்று மாலை பெளர்ணமி திதி ஆரம்பிக்கிறது. இதனால் திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றுமாலை 7 மணி முதல் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.













