---Advertisement---

காவல் நிலையத்தில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

Published on: September 30, 2021
---Advertisement---

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அதிரடியாக செயல்படுகிறார். எளிய முறையில் நடந்து கொள்வதாகவும் மக்கள் அணுகும் முதல்வராக இருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. சமீபத்தில் ரவுடிகளை களையெடுக்க உத்தரவிட்டார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கேற்ப டிஜிபி சைலேந்திரபாபு ரவுடிகளை பிடிக்க உத்தரவிட்டத்தில் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான ரவுடிகள் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தருமபுரி மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்டாலின் அங்கு பதிவேடுகளை சரி பார்த்தார். எல்லா வழக்குகளும் சரியாக கையாளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார் முக ஸ்டாலின்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.