தமிழில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தினை ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது.
இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரித்திருந்த இந்த படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது.
இப்படம் சாதிய பாகுபாடுகளை கண்டிக்கும் விதமாக அமைந்த ஒரு படமாக வந்திருந்தது.
பரியேறும் பெருமாள் படத்தின் ரீமேக் உரிமையை கரண் ஜோஹர் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் படக்குழுவின் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.







