அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. சாதாரணமாக பால் விலை ஏறி விட்டாலே நம்மூர் டீக்கடைக்காரர்கள் டக்கென்று டீயின் விலையை அதிரடியாக ஏற்றி விடுவார்கள்.
தற்போது பால் விலை எதுவும் ஏறவில்லை இருப்பினும் ஒரு டீயின் விலை 1000 ரூபாயாம். பயப்படாதீர்கள் சாதாரண டீ விலையேற்றம் அடையவில்லை. கொல்கத்தா முகுந்தபூர் பகுதியில் உடல் பருமனை குறைக்க உதவும் போலே எனும் சீன டீத்தூள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த டீத்தூள் 3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதால் ஒரு டீயின் விலை 1000 ரூபாயாம்.













