தன் மீது வைத்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு உண்மையில்லை அதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் போவேன் என்று நிவின்பாலி தெரிவித்து இருக்கின்றார்.
கேரளாவில் மலையாள திரைலகில் பாலியல் தொல்லை குறித்து ஹேமா கமிட்டி தகவல் செய்த அறிக்கை மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும் இதற்குப் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அடுத்தடுத்து நடிகைகள் தங்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின்பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நிவின் பாலி தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் மற்றும் சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரை இந்த வழக்கில் ஆறு பேர் குற்றவாளிகள் என்று போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசார் அந்தப் பெண்ணை அணுகி புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இதனை மறுத்துள்ள நிவின் பாலி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் நான் என் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை கேள்விப்பட்டேன். இது முற்றிலும் பொய்யானது. நான் என் மீது உள்ள நியாயத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். உண்மையான குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். மத்ததெல்லாம் சட்டரீதியாக கையாளப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.









