Latest News

மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக வந்த ஃபோன் கால்… மாரடைப்பு சரிந்து விழுந்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!

Published on

செல்போனில் நடக்கும் போலி அழைப்புகளால் ஒரு ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

செல்போனில் போலி அழைப்புகள் மூலம் நடக்கும் ஏமாற்று சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. போலி அழைப்பு காரணமாக அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த 58 வயதான மால்தி வர்மா என்பவருக்கு காலேஜ் செல்லும் வயதில் ஒரு மகளும் பள்ளி செல்லும் வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த மாலதியின் செல்போன் எண்ணுக்கு ஒரு கால் வந்துள்ளது. அந்த அழைப்பை செய்தவரின் ப்ரொபைல் டிஎஸ்பி லோகோவில் ஒரு நபர் உடை அணிந்து இருப்பது போல் இருந்தது .போனை எடுத்த மால்தியிடம் பேசிய அந்த நபர் உங்களின் மகள் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டுள்ளார்.

நான் சொல்லும் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் போடாமல் விட்டுவிடுகிறேன். பணம் அனுப்பிய பின்னர் அவர் பத்திரமாக வீடு வந்து சேருவார் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் பதற்றம் அடைந்த மால்தி தனது மற்றொரு மகளுக்கு போன் செய்து விஷயத்தை கூற வாட்ஸப் காலில் வந்த நம்பரை மகளிடம் கூறியிருக்கின்றார்.

அந்த நம்பர் +92 என்று இருப்பதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய்க்கு ஆறுதல் கூறியிருக்கின்றார். மேலும் காலேஜில் இருந்த சகோதரிக்கும் போன் செய்து அவர் பத்திரமாக இருப்பதை உறுதியளித்து இருக்கின்றார். ஆனால் பதற்றத்துடன் இருந்த மால்தி வீடு திரும்பிய உடனே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். போலி அழைப்பு தொடர்பாக மால்தியின் குடும்பம் புகார் அளித்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending

Exit mobile version