---Advertisement---

மிஷ்கினின் பிசாசு 2 பட பூஜை தொடக்கம்

Published on: December 15, 2020
---Advertisement---

கடந்த 2014 பிப்ரவரியில் வெளியான திரைப்படம் பிசாசு. இப்படம் நல்ல வெற்றியை பெற்றது இப்படத்தை இயக்கிய மிஷ்கின் இப்போது பிசாசு 2 என்ற பெயரில் புதிய படம் நடிக்கிறார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா ஜெர்மியா வித்தியாசமான ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று தொடங்கியது.

இதில் தயாரிப்பாளர் மற்றும் மிஷ்கின் கலந்து கொண்டனர்.

இந்தப்படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் டி முருகானந்தம் தயாரிக்கிறார்.

பிசாசு 2’ பட வேலைகள் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், திண்டுக்கல்லில் படப்பிடிப்பு நடத்துவதற்காக பிரம்மாண்ட செட் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றன. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.