---Advertisement---

ராகுலுக்கு அதிகரித்து வரும் மக்களின் ஆதரவு.. பலரை நிலைகுலைய வைக்கிறது.. மு க ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

By Sri
Published on: September 18, 2024
---Advertisement---

ராகுலுக்கு அதிகரித்து வரும் மக்களின் ஆதரவை பார்த்து பலர் நிலைகுலைந்து வருகிறார்கள் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

இந்திரா காந்திக்கு நேர்ந்தது விரைவில் உங்களுக்கு நேரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஹிண்டே சிவசேனா கட்சியின் எம்எல்ஏ மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்ததாவது “பாஜக தலைவர் ஒருவர் ராகுல் காந்தி அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும் என்ற மிரட்டலுக்கும், ஹிண்டே சிவசேனா கட்சியின் எம்எல்ஏ ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பதாக கூறிய மிரட்டல் பற்றி ஊடகத்தின் செய்திகளால் அறிந்து மிக வேதனை அடைந்தேன்.

எனது சகோதர ராகுலுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பது சிலரை நிலைகுலைய வைக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும், வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தனது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ராகுல் காந்திக்கு ஆதரவையும் மத்திய அரசுக்கு வேண்டுகோளையும் வைத்திருக்கின்றார் முதல்வர் மு க ஸ்டாலின்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!