சிபி சத்யராஜின் நடிப்பில் மூன்று வருடங்கள் முன்பே ஆரம்பிக்கப்பட்ட படம் மாயோன். இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, கொரோனா, உள்ளிட்ட பல தடைகளால் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில் தற்போதுதான் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது.
இப்படத்தை இயக்குபவர் கிஷோர் என் என்பவர். புதைபொருள் ஆராய்ச்சி தேடி செல்லும் நபர்களுக்கு அந்தக்கால விஷ்ணு சிலை கிடைக்கிறது அந்த சிலையின் பின்னால் மர்மமாக செல்லும் கதையே மாயோன்.
இப்படத்துக்கு இளையராஜா வேறு இசையமைப்பதால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.02 மணியளவில் வெளியாகிறது.







