முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமான அருண்குமார் தற்போது அருண் விஜயாக மாறி உள்ளார். ஆரம்பத்தில் இவரின் படங்கள் எல்லாம் வாரிசு நடிகர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும் ஒரு படமும் வெற்றி பெறவில்லை இவரின் எல்லா படங்களும் எதிர்பார்க்கப்பட்டாலும் இவர் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தாலும் ஒரு படமும் வெற்றி பெற இயலாமல் போனது.
பின்பு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வந்த மலை மலை படமும் தொடர்ந்து அதே கூட்டணியில் வெளிவந்த மாஞ்சாவேலு உள்ளிட்ட படங்களின் வெற்றியே அருண்விஜயை சினிமாவில் முன்னேற்றியது என சொல்லலாம்.
அருண் விஜய்க்கு முன்னேற்றத்தை கொடுத்த மாஞ்சா வேலு திரைப்படம் நேற்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கடந்த 2010 மே21ல் இப்படம் வெளிவந்தது.







