மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. 27 வயதான ஹெர்னான்டஸ் கார்னியர் என்பவர் தன்னுடைய தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சையை செய்திருக்கின்றார். பின்னர் சிகிச்சை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறினார்,
அப்போது திடீரென்று அவரது தலையில் இருந்து ரத்தம் வலிய ஆரம்பித்ததால் விமான பணியாளர்கள் அவரை விமானத்திலிருந்து இறங்குவதற்கு வலியுறுத்தினார்கள். எனினும் அவர் விமானத்தை விட்டு வெளியேறுவதற்கு மறுத்துவிட்டார். நீண்ட நேரம் அவருக்கு அறிவுறுத்திய பிறகும் விமானத்திலிருந்து கார்னியர் வெளியேற மறுத்ததால் பணியாளர்கள் காவல்துறை உதவியை நாடினார்கள்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கார்னியரை விமானத்தில் வைத்து கைது செய்து வெளியில் அழைத்து சென்றனர். இவருடன் பயணிக்க இருந்த பிலான்கா என்பவரையும் விமானத்திலிருந்து கைது செய்துபட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்த சம்பவம் காரணமாக விமானம் அன்று இரவு புறப்படாமல் அதிகாலையில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தில் விமான அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்ட கார்னியர் மற்றும் அவரது தோழி பிலான்கா ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக கார்னியருக்கு தலையிலிருந்து ரத்தம் வலியின் இருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







