பீட்ஸா படத்தின் மூலம் அறிமுகமாகி மிக விரைவிலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் கார்த்திக் சுப்புராஜ். தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தை இயக்கியது முதல் மிக விரைவிலேயே சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தை இயக்கியது என முன்னணி இயக்குனராகவே இருந்து வருகிறார்.
தனுஷை வைத்து இவர் சமீபத்தில் இயக்கிய படம் சறுக்கிய நிலையில் தற்போது விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரையும் வைத்து மஹான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.







