இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.இந்த படம் பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு கூறுவது என்னவென்றால்,
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வெங்கட்பிரபு ‘மாநாடு’ குறித்து கூறியிருப்பதாவது:
படம் சிறப்பாக வந்துள்ளது. இது ஒரு புது முயற்சி. தமிழ் சினிமாவுக்கே இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். ‘மாநாடு’ படத்துக்கும் ‘டெனெட்’ படத்துக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. இது முற்றிலுமாக வேறு வகையைச் சேர்ந்த திரைப்படம். இதில் சிலம்பரசன் நடிப்பதால் இதற்கான வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.







