---Advertisement---

லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசு அளித்த கமல்

Published on: June 7, 2022
---Advertisement---

கமல்ஹாசன் கடந்த பல வருடங்களாகவே கமர்ஷியலாக எல்லாரும் விரும்பும் வகையிலான படத்தில் நடிக்கவே இல்லை. வித்தியாசமான படங்களில் நடிக்கிறேன் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அவை யாவும் பெரிய அளவில் போகவில்லை.

இந்த நிலையில் அரசியலில் குதித்த கமல்ஹாசனுக்கு அரசியலும் தொடர் தோல்வியை பரிசாக கொடுத்தது. கடந்த பல வருடங்களாக அதிக தோல்வியை பார்த்த கமல்ஹாசனுக்கு தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் அதிகப்படியான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

படத்தின் மிகப்பெரிய வெற்றியால் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கமல் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.இதனால் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு காஸ்ட்லியான காரும் அன்பளிப்பாக கமல் வழங்கியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.