---Advertisement---

இனி இது இருந்தா தான் திருப்பதி லட்டு… தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…!

Published on: August 30, 2024
---Advertisement---

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி ஆதார் கார்டு இருந்தால் தான் லட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்காய சவுத்ரி இது தொடர்பாக தெரிவித்திருந்ததாவது: “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளி மார்க்கெட்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதங்களை விற்பனை செய்வதை நாங்கள் கண்காணித்தோம்.

இதை தடுக்க தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்டர்களில் ஆதார் அட்டையை பதிவு செய்து இரண்டு லட்டுகளை பெறலாம் என்று முடிவு செய்துள்ளோம். மேலும் இடைத்தரகர்கள் தலாரிகளின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு பிரசாதங்களை வெளிப்படை தன்மையுடன் வழங்கவும் டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஆதார் சரிபார்ப்பு அமல்படுத்தவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவெடுத்திருக்கின்றது.

பொது பக்தர்களின் பெரிய நன்மைக்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லட்டுக்களை 48 முதல் 62 வரை உள்ள கவுண்டர்களில் பக்தர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.  தரிசன டிக்கெட்டுகள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர முன்பு போல கூடுதல் லட்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த நடவடிக்கை லட்டு வினியோக அமைப்பில் வெளிப்பட தன்மையை அதிகரிக்கும்” என்று தெரிவித்திருக்கின்றார்.

পড়তে ভুলবেন না

கர்நாடக மணப்பெண் கைது மணமகன் கொலை முயற்சி காதலன் தர்ஷன்.

கர்நாடக மணப்பெண் கைது: திருமணத்தன்று மணமகனை கொல்ல முயற்சி!

ரஜினிகாந்த் கமல் ஹாசன் நெல்சன் டார்க் காமெடி படம் ப்ரோமோ ஷூட்.

ரஜினிகாந்த் கமல் ஹாசன் நெல்சன்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மெகா கூட்டணி! நெல்சனின் ‘டார்க் காமெடி’ மேஜிக்!

டி ராஜேந்தர் விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு கௌதம் மேனன் பாராட்டு.

டி ராஜேந்தர் விண்ணைத்தாண்டி வருவாயா: “அந்தப் படம் என்னையே வியக்க வைத்தது” – சிம்புவின் VTV பற்றி உருக்கமாகப் பேசிய டி.ஆர்!

மிருணாள் தாகூர் தனுஷ் சகோதரர் விளக்கம் வதந்தி முற்றுப்புள்ளி.

மிருணாள் தாகூர் தனுஷ்: “தனுஷ் என் சகோதரர் மாதிரி..” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள்!

டெஸ்ட் கிரிக்கெட் வெள்ளை உடை வீரர்கள் சிவப்பு பந்து விளையாட்டு.

டெஸ்ட் கிரிக்கெட் வெள்ளை உடை: ஏன் வீரர்கள் வெள்ளையில் ஆடுகிறார்கள்? பின்னணியில் உள்ள ரகசியம்!

பள்ளிச்சட்டம்பி அப்டேட் கயாடு லோகர் டோவினோ தாமஸ் ஏப்ரல் 9 ரிலீஸ்.

பள்ளிச்சட்டம்பி அப்டேட்: டோவினோ தாமஸ் – கயாடு லோகர் மிரட்டல் லுக்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!