Latest News
பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன்… தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியாவின் நிதேஷ் குமார்…!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் நிதேஷ்குமார் தங்கம் வென்று இருக்கின்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் பல போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று குவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று இருக்கின்றது. பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்க பதக்கம் வென்றார்.
பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தியுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என்று 9 பதக்கங்களை பெற்றிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.