Latest News
நம்ம தல தோனிக்கு பெரிய விசில் போடு…ஹேப்பி பர்த் டே தலைவா…
மகேந்திரசிங் தோனி கிரிக்கெட் விளையாட்டு இருக்கும் வரை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த பெயரும் நிலைத்தே நிற்கும். இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்பதை இவர் பல முறை தனது ஆளுமையால் நிரூபித்திருக்கிறார்.
கபில் தேவ், கவாஸ்கருக்கு பிறகு உலக இந்திய அணிக்கு வேறுஒரு வீரர் வருவாரா? என எதிர்பார்த்து காத்திருந்தது அணி. அத்திப் பூத்தது போல வந்தவர் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட் விளையாட்டில் இவர் இதுவரை நிகழ்த்தாத சாதனை எதுவென கண்டறிய துப்பறிவாளர்கள் குழுவை அமைத்துத் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்திய அணியில் கிரண் மோரே, நயன் மோங்கியாவிற்கு பிறகு சொல்லும் படியான விக்கெட் கீப்பர் அமையவில்லை. ராகுல் டிராவிட்டை நம்பியே ஒரு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றது இந்திய அணி.
இறைவனாக பார்த்து இந்திய அணிக்கு கொடுத்த வரமாக வந்து சேர்ந்தவர் தோனி. இளம் வீரர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு இருபது ஓவர் உலக்கோப்பை வென்று இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் இவர்.
சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு மற்ற அணி வீரர்கள் எல்லாறையும் பயப்பட வைத்த வீரராக வளர்ந்தார். அதோடு மட்டுமல்லாமல் இவரது நுணுக்கமான அணுகுமுறைகளாலும் அசர வைத்தவர்.
1983ற்குப்ப்றகு ஐம்பது ஓவர் உலக் கோப்பை வெல்வது என்பது கனவாகவே இருந்து வந்தது இந்திய அணிக்கு. 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாடும், அதன் மீது ஆர்வம் கொண்டவர் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் மறக்க மாட்டார்கள்.
இறுதிப் போட்டிவரை பேட்டிங்கில் ஏமாற்றத்தை தந்து வந்தவர் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடிய விஸ்வரூப ஆட்டம் போட்டியை பார்த்தவர்க்ளை மிரள வைத்தது.
எந்த ஒரு விக்கெட் கீப்பரும் செய்திருக்காத சாதனைகள் பலவற்றையும் இவர் செய்து காட்டியுள்ளார். அதே போல உள்ளூர் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கென தனி கெத்து கிடைக்க காரணமும் இவரே. 1981ம் ஆண்டு இதே ஜூலை மாதம் ஏழாம் தேதியில் பிறந்தார் இவர்.
இவரின் நாற்பத்தி நான்காவது பிறந்த தினம் இன்று. இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தோனியின் ரசிகர்கள் இவரது இந்த பிறந்த தினத்தை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கொண்டாடி வருகின்றனர்.