மலையாளத் திரையுலகில் நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இடையே பலமான கூட்டணி அமைவது வழக்கம் தான். ஆனால், டொவினோ தாமஸ் மற்றும் பாசில் ஜோசப் இடையிலான அந்த பந்தம் கொஞ்சம் ஸ்பெஷல். இவர்களை வெறும் நடிகர்-இயக்குநர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது; இவர்களது நட்பு ஒரு ‘மின்னல்’ வேகத்தில் வளர்ந்து இப்போது ஒரு குடும்ப உறவாகவே மாறிவிட்டது. இன்று டொவினோ தாமஸ் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவரது நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பாசில் ஜோசப் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியும் புகைப்படங்களும் தான் இப்போதைய இணையத்து ஹார்ட் பீட்.
View this post on Instagram
பாசில் ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டொவினோவுடன் இருக்கும் பல சுவாரசியமான, இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். “பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா… நாம் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும், இன்னும் பல பயணங்களை ஒன்றாக மேற்கொள்ள வேண்டும்” என்கிற ரீதியில் அவர் பதிவிட்டிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சாதாரண ஒரு நண்பராக இல்லாமல், ஒருவருக்கொருவர் ‘Buddy’ என்று அழைத்துக்கொள்ளும் இவர்களது அந்தப் புகைப்படங்களில் இருக்கும் சிரிப்பு, அவர்கள் எவ்வளவு ஆழமான புரிதலில் இருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாகச் சொல்லுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால், சினிமாங்கிறது ஒரு மாய உலகம். இங்கே இன்னைக்கு இருக்குற நட்பு நாளைக்கு இருக்குமானு சொல்ல முடியாது. ஆனா, ‘கோதா’ படத்துல ஆரம்பிச்சு ‘மின்னல் முரளி’ வரைக்கும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச மேஜிக் சாதாரணமானது இல்ல. ஒருத்தரோட பலம் இன்னொருத்தருக்குத் தெரியும், ஒருத்தரோட குறையை இன்னொருத்தர் கிண்டல் பண்ணுவாங்க. நிஜ வாழ்க்கையிலயும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற அந்த “லூட்டி”கள் தான் அவங்க படங்கள்ல வர்ற காமெடிகளுக்கும் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் போலத் தெரியுது.
இந்த எதார்த்தமான உலகத்துல போட்டி, பொறாமை இதெல்லாம் தாண்டி ஒருத்தரோட வளர்ச்சியை இன்னொருத்தர் கொண்டாடுறது பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. டொவினோ எவ்ளோ பெரிய ஸ்டாரா இருந்தாலும், பாசில் முன்னாடி ஒரு சின்னக் பையனா மாறிடுற அந்த எனர்ஜி தான் இவங்களோட வெற்றிக்கான ரகசியம்னு தோணுது. டொவினோவுக்கு இப்போ 2026-ல நிறையப் படங்கள் லைன்-அப்ல இருக்கு, அதோட சேர்த்து பாசில் ஜோசப்போட அடுத்த மாஸ் படத்துலயும் இவர் எப்போ கமிட் ஆவாருன்னு ரசிகர்கள் ஆவலா இருக்காங்க. இந்த ‘மின்னல்’ நட்பு இப்படியே இன்னும் பல வருஷம் நீடிக்கணும்னு அவங்க ரசிகர்கள் வாழ்த்திக்கிட்டு வர்றாங்க. ஹேப்பி பர்த்டே டொவினோ!





