---Advertisement---

கவினை பளார் என அறைந்த நண்பர் – பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி (வீடியோ)

By Sri
Published on: September 13, 2019
Kavin slapping
---Advertisement---

பிக்பாஸ் போட்டியாளர் கவினை அவரின் நண்பர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் காதல் மன்னனாக வலம் வருபவர் அபிராமி, சாக்‌ஷி இருவரும் வெளியேறியபின் லாஸ்லியாவுக்கு ரூட் விட்டு வருகிறார். ஆனால் லாஸ்லியா தன் முடிவை உறுதியாக கூறாத நிலையிலும் அவரை தொடர்ந்து கவின் வற்புறுத்தி வந்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை தாய் மற்றும் சகோதரிகள் லாஸ்லியாவிற்கு ‘இது தேவையில்லை விளையாட்டில் கவனம் செலுத்து’ என அறிவுரை கூறினர். இதைக்கண்ட கவின் குற்ற உணர்ச்சியில் குறுகிப்போனார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கவினின் நண்பர் நீ செய்த தவறுகளுக்காக உன் கன்னத்தில் அறைகிறேன் எனக் கூறிவிட்டு அவரின் கன்னத்தில் அறைகிறார். இதைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடையும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.