---Advertisement---

சிறுசுகளைக் கவர்ந்த காந்தக் கண்ணழகி பாடல் – யுடியூபில் செய்த சாதனை!

By Sri
Published on: April 1, 2020
---Advertisement---

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்று இருந்த காந்தக் கண்ணழகி என்ற பாடல் யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பலவாறாக விமர்சிக்கப் பட்டாலும் அவர் படத்தில் இடம்பெறும் பாடல்கள் எப்போதுமே ஹிட்டாக அமையும். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான அவரின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்றிருந்த காந்தக் கண்ணழகி எனும் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடலையும் அவரே எழுதினார் என்பது கூடுதல் சிறப்பு.

சமூகவலைதளங்களிலும் கொண்டாடப் பட்ட அந்த பாடல் யுடியூபில் அதிகப் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில் இந்த பாடல் தற்போது யுடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.  இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்கள் மட்டுமே 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் ரௌடி பேபி பாடல் இதுவரை 80 கோடி பேரால் பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஸ்மைலி போட்டு கலாய்த்த அருண் விஜய் - கோபத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!