---Advertisement---

சாக்‌ஷியை கையும் களவுமாக பிடித்த கமல்ஹாசன் – பிக்பாஸ் வீடியோ

By Sri
Published on: September 7, 2019
---Advertisement---

பிக்பாஸ் சாக்‌ஷியை கமல்ஹாசன் கேள்விகளால் துளைத்தெடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை தற்போது தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், அது தர்ஷனின் வெற்றியை பாதிக்கும் என வனிதா விஜயகுமார் பேசி வரும் விவகாரமே பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக வனிதாவிடம், ஷெரின் சண்டை போடும் சம்பவமும் ஷெரினுக்கு சேரனும், சாக்‌ஷியும் ஆறுதல் கூறும் சம்பவம் நடந்தது. அப்போது ‘நம்மை பார்த்து நாய் குரைத்தால் நாம் அழக்கூடாது. நான் வெளியே இருக்கும் மக்களை சொன்னேன்’ என ஷெரினுக்கு சாக்ஷி ஆறுதல் கூறினார். அதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இன்று நிகழ்ச்சிக்கு வரும் கமல்ஹாசன், சாக்‌ஷியை வெளியே அழைத்து பேசுகிறார். அப்போது வெளியேயும், ஷெரினிடமும் அவர் பேசியை கூறி அவர மடக்க முயலும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  உள்ளாட்சி தேர்தல் தோல்வி- கமல்ஹாசனின் அறிக்கை

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.