---Advertisement---

கமல்ஹாசன் நடித்துள்ள நாயகன் படத்தின் 33ம் ஆண்டு நிறைவு நாள் விழா

Published on: October 22, 2020
---Advertisement---

கடந்த 21 அக்டோபர் 1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இந்த படத்தில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, கார்த்திகா, மற்றும் பலரானோர் நடித்திருந்தனர். மணிரத்னம் இப்படத்தை இயக்கி இருந்தார்.

கமல்ஹாசனின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரும் சாதனை படைத்த படங்கள் பல அதில் குறிப்பிடத்தக்க முக்கியமான திரைப்படம் நாயகன் ஆகும். இந்த திரைப்படம் பம்பாயில் வாழ்ந்த ஒரு உண்மை தமிழரான வரதராஜ முதலியார் என்பவர்  பற்றிய கதையாகும்.

அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் கமல்ஹாசன். வேலு நாயக்கர் என்ற பெயரில் கமல் நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று சொல்ல வேண்டும். வரதராஜ முதலியாரின் ஒரிஜினல் கதையை அப்படியே திரைப்படமாக்கவில்லை. திரைக்கதையை கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தனர் படத்தின் கரு மட்டுமே வரதராஜ முதலியாரின் வாழ்க்கை சரித்திரம் ஆகும்.

இப்படம் கமல்ஹாசனுக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.

இசைஞானி இளையராஜா இசையமைத்த நிலா அது வானத்து மேலே, அந்திமழை மேகம் போன்ற பாடல்கள் மிக பிரபலமாகி அந்த நேரத்தில் பெரும் ஹிட் ஆகின.

இந்த படத்தின் 33ம் ஆண்டு விழாவை கமல் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Sarpatta Parambarai 2 movie shooting announcement poster.

ஆர்யா – பா.ரஞ்சித் கூட்டணியின் ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!