---Advertisement---

வித்தியாசமான கதைக்களத்தில் கமல் நடித்த இந்த படத்துக்கு 43 வயது

Published on: October 29, 2021
---Advertisement---

பிரபல இயக்குனர் ஆர்.சி சக்தி இயக்கத்தில் கடந்த 29.10.1978 ம் ஆண்டு வெளியான படம்தான் மனிதரில் இத்தனை நிறங்களா.

இந்த படத்தில் கமல்ஹாசன் வித்தியாசமானதொரு வேடத்தில் கிராமத்து அப்பாவி மனிதராய் அதே நேரத்தில் வீரமானவராகவும் கிராமத்தில் சைக்கிள் கடை வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஸ்ரீதேவி கதாநாயகி போல் இருந்தாலும் இந்த படத்தில் இவருக்கு சத்யப்பிரியா என்ற நடிகைதான் ஜோடி.

ஷ்யாம் இசையமைத்து இருந்த இந்த படத்தில் இடம்பெற்ற மழை தருமோ என் மேகம் என்ற பாடல் புகழ்பெற்றது.

இப்படம் வெளிவந்து 43 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. அந்த நேரத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் படம் நன்றாக ஓடியது. இந்த படமும் 20 நாட்கள் இடைவெளியில் ரிலீஸ் ஆனது அதனால் பெரிய அளவில் இப்படம் பேசப்படாமல் போனது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.