நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் வருடா வருடம் நவம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. தனது ரசிகர் மன்றத்தை எப்போதோ கமல் நற்பணி இயக்கமாக மாற்றிவிட்டார் இதனால் இந்த நாட்களில் ரசிகர்கள் நற்பணிகள் செய்வதையும் பிறந்த நாள் கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பிறந்த நாள் விக்ரம் படப்பிடிப்பில் முன்னதாகவே கமல் கொண்டாடினார். பிறந்த நாள் அன்று விக்ரம் பட ஷூட் இல்லாததால் சற்று முன்னதாகவே படக்குழுவினருடன் கமல் கொண்டாடியுள்ளார்.
https://twitter.com/DirLokeshFC/status/1455160334025572361?s=20









