---Advertisement---

பாகுபலி இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு – ஆர்ஆர்ஆர்(RRR) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

By Sri
Published on: March 28, 2020
RRR FIRST LOOK
---Advertisement---

இயக்குனர் ராஜமவுலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி இந்திய அளவில் பெரும் வெற்றியைக் குவித்தது. இவர் அண்டை மாநிலமான தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரம்மாண்டத்தில் கூடிய ஹிட் படங்களை கொடுக்கக்கூடிய இயக்குனர். தெலுங்கு சினிமாவில் இவரின் இயக்கத்தில் பல்வேறு படங்கள் வெளியாகி பெரும் அளவில் ஹிட்டடித்தது,  இதனை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்றே சொல்லலாம்.

ராஜமௌலி புதிதாக ஆர்ஆர்ஆர்(RRR) என்ற படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இயக்கவுள்ளார். இந்த அனைத்து மொழிகளிலுமே ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர்.

நடிகர் ராம்சரணின் பிறந்த நாளை (மார்ச் 27) முன்னிட்டு அவரின் பிறந்தநாள் பரிசாக ஆர்ஆர்ஆர்(RRR) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ 5 மொழிகளிலும் வெளியிடப்பட்டது. அதில் தெலுங்கு விடியோவை ஜூனியர் என்டிஆர் அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் ராம் சரணின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறித்து ஜூனியர் என்டிஆர் அனைத்து மொழிகளிலுமே தன் சொந்த குரலில் பின்னணியில் பேசியுள்ளார். இப்போது ரசிகர்கள் இந்த படத்தின் ஜூனியர் என்டிஆரின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ எப்போது வரும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். ராம்சரண் போலவே ஜூனியர் என்டிஆரின் கதாபாத்திரத்தின் விடியோவை அவரது பிறந்தநாள் அப்போது வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  RAM CHARAN Peddi Song : செர்ரி உடன் குத்தாட்டம் போடப்போவது யார்? – பெத்தி பட லேட்டஸ்ட் அப்டேட்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?

Editorial visual featuring Rashmika Mandanna meeting Chief Minister Vijay.

“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the announcement of Suhas's bilingual film Hide And Silk.

சூரி வாழ்த்து தெரிவித்த சுஹாஸின் புதிய இருமொழிப் படம் ‘ஹைட் அண்ட் சில்க்’: தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ்!

'ஜெயிலர் 2' பட டிக்கெட் முன்பதிவு குறித்த செய்திப் படம்.

ஜெயிலர் 2 டிக்கெட் விலை விவகாரம்: பெங்களூரில் ரூ.2000, சென்னையில் எவ்வளோ தெரியுமா?