ஒரு காலத்தில் புகழ்பெற்ற ஹிந்தி நடிகையாக விளங்கியவர் ஜூகி ஜாவ்லா. இவர் சில வருடங்களாக படத்தில் நடிப்பதில்லை. நேரடி தமிழ் படங்களில் இவர் நடித்தது இல்லை மொழி பெயர்க்கப்பட்டு கன்னடத்தில் இருந்து தமிழில் வந்த நாட்டுக்கொரு நல்லவன், பருவராகம் படத்தில் இவர் நடித்து இருந்தார்.
இவரின் தோடு ஒன்று காணாமல் போய் உள்ளதாம் இதனால் மிகுந்த அப்செட்டில் இவர் உள்ளாராம்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் இவர் கூறியுள்ளதாவது,மும்பை விமான நிலையத்தில் வைத்து தனது வைரத்தோடு காணாமல் போய்விட்டதாகவும் அந்த தோடு நான் 15 வருடங்களாக ராசியான தோடு செண்டிமெண்டாக நல்ல தோடு அதை எடுத்தவர்கள் தயவு செய்து கொடுத்து விடுங்கள் தகுந்த சன்மானம் தருகிறேன் என கூறியுள்ளார்.







