பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணிக்காக விளையாடாமல் தங்கள் சுயநலத்துக்காக விளையாடுபவர்கள் எனக் கூறியுள்ளார்.
இந்திய வீரர்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அப்ரிடி மற்றும் கம்பீர் இடையிலான சர்ச்சை விவாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்திய வீரர்கள் சுயநலம் மிக்கவர்கள் எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வர்ணனையாளர் ரமீஸ் ராசாவுடன் அவர் நடத்திய விவாதத்தில் ‘பாகிஸ்தான் வீரர்கள் 30, 40 ரன்கள் எடுத்தாலும் அது அணிக்காக எடுக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் இந்திய வீரர்கள் அப்படி அவர்கள் சதம் அடிப்பது சுயநலத்திற்குத்தான் எனவிமர்சனம் தெரிவித்துள்ளார்.’ எனக் கூறியுள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியும் இது போல இந்திய வீரர் கம்பீருக்கு எதிரான கருத்தைக் கூறி சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.













