---Advertisement---

தலைப்பு மாறுகிறது சூர்யாவின் அருவா – பின்னணி என்ன ?

By Sri
Published on: March 9, 2020
---Advertisement---

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் ஆறாவது முறையாக உருவாக இருக்கும் அருவா படத்தின் தலைப்பு மாற்றப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு பின்னர் சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்தது.இந்த கூட்டணி இதற்கு முன்னதாக ஆறு, வேல், சிங்கம்1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய 5 படங்களை உருவாக்கியுள்ளனர்.

ஹரி படம் என்றாலே அருவாளுக்கும் கத்திக்கும் பஞ்சம் இருக்காது என்று ரசிகர்களுக்குத் தெரியும். இந்நிலையில் இந்த படத்துக்கு அருவா என்று பெயரே வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். ஆனால் இப்போது படத்தின் தலைப்பு மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அதே தலைப்பில் மற்றொரு திரைப்படம் உருவாகி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஹரி இப்போது வேறு ஒரு பெயரைத் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.