---Advertisement---

இளையராஜா கோபத்துக்கு பதில் கூறிய இசையமைப்பாளர் – வீடியோ பாருங்க

By Sri
Published on: May 31, 2019
இளையராஜா கோபத்துக்கு பதில்
---Advertisement---

96 படம் தொடர்பாக இளையராஜா கோபமான கருத்தை தெரிவித்துள்ள நிலையில் அப்படத்தின் இசையமைப்பாளர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தற்போது வெளியாகும் பல திரைப்படங்களில் சிறு காட்சிகளாவது 80களில் இளையராஜா இசையமைத்த பாடல்களை ஒலிக்க விடுகின்றனர். குறிப்பாக, விஜய்சேதுபதி – திரிஷா இணைந்து நடித்த 96 படத்தில், சிறு வயது த்ரிஷா கதாபாத்திரம் இடம் பெற்ற பெரும்பாலான காட்சிகளில் இளையராஜா பாடல் ஒலிக்கவிடப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இளையராஜா ‘இது தவறான விஷயம். அப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் என் இசையை ஏன் பயன்படுத்த வேண்டும்? படத்தின் இசையமைப்பாளரே அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை இசைமைக்க முடியாதா? இது ஆண்மை இல்லா தனம்” என கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா ஆணவமாக பேசுவதாக அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தளபதி படத்தில் இளையராஜா இசையமைத்த ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை வயலின் கருவியால் வாசித்து, எப்போதும் இளையராஜா ரசிகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/govind_vasantha/status/1133795396424089600

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.