---Advertisement---

நாலு படம் நாளைக்கு மட்டுமா!…கரையை கடக்கப்போகுதா கோடம்பாக்க புயல்?…

Published on: May 23, 2024
pakalariyan
---Advertisement---

2023ம் வருஷம் தமிழ் சினிமாவ கொஞ்சம் கஷ்டம்தான் படுத்துன்னே சொல்லலாம் போல. 5மாசம் முடியப்போற நேரத்துல பெரிய ஹீரோக்கள்லாம் இன்னும் தங்களோட ரசிகர்கர்களை இன்னும் வெயிட் பண்ணதான் வெச்சிக்கிட்டு இருக்காங்க ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன்னு லிஸ்ட் நீண்டுகிட்டே தான் போகுது.

“ரத்னம்”, “அரண்மனை-4”, இந்த ரெண்டு படங்கள் மட்டும் தான் சம்மர் ஸ்பெஷலா வந்தது. மற்றபடி வெறியேத்துற மாதிரி வேறலெவெல் படங்கள் எதும் இதுவரை வெளியாகவில்லைன்னே சொல்லலாம். இப்போ திடீர்னு பாத்தா ஒரே நாள்ல நாலு படம் ரிலீஸ் ஆகப்போது. நாளைக்கு வெள்ளிகிழமை அதுவுமா வருதே இந்த நாலுல எதுக்கு மொதல்ல டிக்கெட் புக் பண்ணலாம்னு யோசிக்கிறாங்க சினிமா வியூவர்ஸ்.

aathi
aathi

ஹிப்-ஆப் தமிழா ஆதி நடிப்பில் அனிகா சுரேந்திரின் பி.டி.சார் படம் வருது. படத்தில ஹீரோவும் நான் தான் மியூசிக் டைரக்டரும் நான் தான்ன்னு சொல்ற ஆதி இந்த படத்துல ஹீரோவா மட்டுமே நடிச்சிருக்குறார். வெற்றி, அக்ஷ்யா, ஸ்ரீதீனா நடிப்பில் ராஜ் இயக்கியுள்ள பகலறியான் படமும் நாளை தான் திரைக்கு வருகிறதாம்.

ராஜ் நிதின், மது, ஜானகிராமன் உள்ளிட்ட பலரும் நடித்த “ஆறு கண்களும் ஒரே பார்வை”, காதல் கதைகளில் கொஞ்சம் வித்யாசமானது என சொல்ல வைக்கிறமாதிரி தான் இந்த படம் இருக்மன்னு பேசப்பட்டு வருகிறது. அதே போல “பூமரக்காத்து” இந்த படமும் நாளைக்கு தான் ரிலீஸ். மொத்தத்தில் கோடை விடுமுரை முடிவடைகின்ற நேரத்தில் இப்படி நாலு படங்களை ஒரே நாளில் தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த போகிறது கோலிவுட். படங்கள் அதிகமாக வரமால் கோடம்பாக்க சினிமா கடலில் மையம் கொண்டிருந்த நாலு புயல்கள் நாளை கரையைகடக்க  உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!