விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு சில அறிவுரையை வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” என்ற திரைப்படம் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் கோட் திரைப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், அஜ்மல், அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, மோகன், ஜெயராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயங்கியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் டிக்கெட் விலை வாங்க குவிந்து வருகின்றார்கள்.
உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் திருவிழா போல் கொண்டாட உள்ளனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தின் நடிக்க இருக்கின்றார். அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியல் தலைவராக மாற இருக்கின்றார்.
இந்நிலையில் கோட் திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சில அறிவுரையை வழங்கியுள்ளார். அதன்படி அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும் தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும். கோட் திரைப்படம் திரைக்கு வரும் போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கின்றார். ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வாய்மொழியாக இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.













