---Advertisement---

சென்னையில் விநாயகர் ஊர்வலம்… இந்த தேதிகளில் தான் நடத்த வேண்டும்… வெளியான அறிவிப்பு…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

சென்னையில் விநாயகர் ஊர்வலம் செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. தமிழகம் முழுவதும் அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட உள்ளது.

சென்னையில் 1500 பெரிய சிலைகள் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதை தவிர சிறிய சிலைகள் பலரது வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படும் நாளிலிருந்து 7 நாட்கள் கழித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

அந்த வகையில் வருகிற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் அன்றிலிருந்து ஏழு நாட்கள் கழித்து செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையராக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு இடங்களில் விநாயகர் சிலை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பட்டினம் பாக்கம் சீனிவாசபுரம் நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவெற்றியூர் பாப்புலர் எடை மேடு உள்ளிட்ட நான்கு இடங்களிலும், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ராமகிருஷ்ணன் நகர் கடல் பகுதியிலும் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களை போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை... இன்று தங்கம், வெள்ளி நிலவரம் இதோ...!

அந்த வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பட்டினம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட தென் சென்னை பகுதியில் வைக்கப்படும் சிலைகள் நீலாங்கரை பல்கலை நகரில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ஆர்கேநகர் தங்கச்சாலை ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்படும் சிலைகள் காசிமேடு மீன் பிடித்துறை முகத்திலும், திருவொற்றியூர் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள சிலைகள் திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடு பகுதிகளிலும் கரைக்கப்பட உள்ளன.

விநாயகர் சிலைகளை வைக்கும் இடங்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாமல் மத உணர்வை தூண்டும் நோக்கில் ஒளிபரக்கியில் பேசக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் சுமார் 15,000 பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!