விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் உலகெங்கும் இருக்கும் வித விதமான பிள்ளையார்கள் வெளியே தெரிய ஆரம்பித்து விடும். பிள்ளையார்களில் எத்தனையோ வகை உண்டு. யானை முகம் இல்லாத பிள்ளையார் கூட உண்டு.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இப்படித்தான் ஒரு பிள்ளையார் ஃபேமஸ் ஆகியுள்ளது. அந்த பிள்ளையார் மரத்தில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
ஓரளவு விநாயகர் தோற்றத்தில் இருந்த அந்த மரத்தின் காதுகளில் இரண்டு முறங்களை வைத்து அச்சு அசல் விநாயகராகவே அவரை மாற்றிவிட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணேசமரத்துக்கு 10 நாட்களாக அந்த பகுதி மக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் சிறப்பு பூஜைகள் அபிசேக ஆராதனைகள் நடந்தது.







