ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, நயன் தாரா, அசின், மனோபாலா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்த கஜினி திரைப்படம் கடந்த 2005ம் ஆண்டு வெளியானது.
ஆங்கில படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டாலும் தமிழுக்கென காட்சியமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் திடீர் திடீரென மறந்து விட்ட ஒருவர் தன்னுடைய நினைவுக்காக உடல் முழுவதும் குறிப்புகளை எழுதி வைத்து கொள்வது வில்லன்களை பழிவாங்குவது என வித்தியாசமான முறையில் இப்படம் படமாக்கப்பட்டிருக்கும்.
இப்படத்தில் மொட்டைத்தலையுடன் உடலெல்லாம் கிறுக்கல்களுடன் ஒரு கெட்டப்பிலும் சஞ்சய் ராமசாமி என்ற தொழிலதிபர் கெட் அப்பிலும் ரிச் லுக்குடன் சூர்யா நடித்திருந்தார்.
நயன் தாராவின் நடிப்பு இப்படத்தில் வெகுவாக பேசப்படவில்லை அதே நேரத்தில் இப்படத்தில் நடித்த அசின் நடிப்புத்தான் படத்திற்கு பெரும்பலமாக இருந்தது. மிகவும் க்யூட்டாக சஞ்சய் ராமசாமிய நான் லவ் பண்ணலப்பா என பேசும் காட்சிகள் தொடங்கி அசினை திரையில் ரசிக்க வைத்தது இப்படம். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் இனித்தன.
இன்றுடன் இப்படம் வந்து 15 ஆண்டுகள் நிறைவு பெறுகிறதாம்.








