---Advertisement---

ஃபார்முலா 4 கார்பந்தயம்… 8 மணிக்குள் இத செஞ்சே ஆகணும்… நீதிமன்றம் அதிரடி…!

By Sri
Published on: August 31, 2024
---Advertisement---

ஃபார்முலா 4 கார்பந்தயம் இன்று நடைபெற உள்ள நிலையில் 8 மணிக்குள் சான்றிதழ் பெறவில்லை என்றால் கார்பந்தயம் ஒத்திவைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது.

ஃபார்முலா 4 கார்பந்தயம் மலையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கின்றது. சென்னை ஐகோர்ட் அளித்திருக்கும் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீடிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முறையீடு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தர சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். சான்றிதழ் பெற்ற பின்னரே கார்ப்பந்தயம் நடத்த முடியும் என்பதால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் சான்று பெற 8 மணி வரை அவசர அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கின்றது. இரவு 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

9 மணி வரை அவகாசம் வழங்கும் படி அரசு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில் 8 மணி வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பந்தயத்தை காண ஆர்வமுடன் வந்துள்ள நிலையில் 8:00 மணிக்குள் வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing the collaboration between actor Vishal and director RS Durai Senthilkumar for 7 Screen Studio.

விஷாலின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்: லலித் குமார் உதவியால் மீண்டும் இணையும் கூட்டணி – இயக்கவிருக்கும் பிரபல இயக்குநர்!

Concept graphic celebrating Maestro Ilaiyaraaja's soulful composition of the Muthumani song for Dorothy.

இளையராஜாவின் மேஜிக் ஹார்மோனியம்: ‘டொரா தி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட படக்குழு!

Official release date announcement poster for Fahadh Faasil's Don't Trouble The Trouble.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!

Popular Kollywood actor brothers Suriya and Karthi sharing a warm bond.

கார்த்தி பற்றி நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு: “அவன் வழி தனி வழி.. அவனுக்கு சினிமாதான் உலகம்!” வைரலாகும் பாராட்டு!

Social media star Amala Shaji making her acting debut in Vikram Prabhu's upcoming film.

Amala Shaji Acting Debut: பிரபல இன்ஸ்டாகிராம் ஸ்டார் அமலா ஷாஜி என்ட்ரி: விக்ரம் பிரபு படத்துடன் நடிகையாக அறிமுகம் – செம குஷியில் ரசிகர்கள்!

Actor GV Prakash sharing insights about his upcoming pan-India vampire movie Immortal during a press meet.

GV Prakash Reveals About Immortal: இந்திய சினிமாவுக்கே இது புதுசு: ‘இம்மார்டல்’ படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட ஷாக் தகவல்!