பிரிட்டனில் புதிதாக ஒரு வைரஸ் பரவி வருவதாகவும் அதனால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு விடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸால் மற்ற நாடுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. சவுதி அரசு தனது விமான சேவையை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதே போல் இந்தியாவும் டிசம்பர் 31 வரை விமான போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.







