---Advertisement---

இனி குஷி தான்…தீனதயாளன் வேற திரும்ப வரப்போறாராம்!…ஏ.எம்.ரத்தினம் போடும் புதுக்கணக்கு?…

Published on: April 26, 2024
vijay ajith
---Advertisement---

“கில்லி” பட ரீ-ரிலீஸ் தமிழ் திரை உலகத்தையே உற்றுப்பார்க்க வைத்துள்ளது. படம் ரிலீசான போது என்ன வரவேற்பு இருந்ததோ அது இம்மியளவும் குறையாமல் இப்பொழுதும்  இருந்ததால் சந்தோஷம் நிரம்பி வழிந்ததாம்.

gilli
gilli

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுடைய பழைய வெற்றி படங்களையெல்லாம் தூசு தட்டி எடுக்க துவங்கியுள்ளனர். “கில்லி” ரீ-ரிலீசுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வாயடைத்து போகியிருக்கிறாராம் அதன் தயாரிபாளர் ஏ.எம்.ரத்தினம்.

இது தான் சரியான நேரம் நம்ம புதுசா ஒரு படத்தை எடுத்து அதுல காசை போட்டு கஷ்டப்படுவதை விட நம்ம பழைய படங்கள் எதையாவது ரீ-ரிலீஸ் செய்யலாமன்னு ரத்தினம் யோசிக்கிறதா ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.

ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவான “இந்தியன்” படமும் இவர் தயாரித்ததே. ஆகையால் அதையும்  ரீ-ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகிறாராம் ஏ.எம்.ரத்தினம்.

“இந்தியன் 2” வரவிருக்கின்ற நேரத்தில் “இந்தியன்” முதல் பாகம் வெளிவந்தால் அதுவும் நன்றாகத்தான் இருக்கும். விஜய் நடிப்பில் விஸ்வரூப வெற்றியடைந்த “குஷி”யின் தயாரிப்பாளரும் ரத்தினமே தான்.

அவர் போட்டுள்ள கணக்கின்படி விரைவில் ரசிகர்களை குஷிப்படுத்த போகின்ற மாதிரி தான் செய்திகள் வருகிறதாம். இந்த திட்டததை எப்படி செயல்படுத்த போறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் அந்தணன் சொல்லியிருக்கிறார்.

இதே போல் மே 1ம் தேதி அஜித்குமாரின் பிறந்த தினம். அன்று “மங்காத்தா” ரீ-ரிலீஸ் ஆகப்போகிறது என காத்திருக்கும் ரசிகர்களுக்கு பட உரிமை விவகாரங்களால் தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்ய வாய்ப்பு குறைவே, ஆனால் அயல்நாடுகளில் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகம் என்ற தகவலும் கசிந்துள்ளது.

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க அஜீத் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய “தீனா” படத்தை மே ஒன்றாம் தேதியன்று ரீ-ரிலீஸ் செய்ய ஒரு பிளான் இருப்பதாகவும் செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருக்கிறது….

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!