---Advertisement---

வானிலை அறிக்கையை பொருட்படுத்தவில்லை- திமுக மீது எடப்பாடி குற்றச்சாட்டு

Published on: November 13, 2021
---Advertisement---

முன்னாள் தமிழக முதல்வராக இருந்தவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தற்போதைய தமிழக எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்து வருகிறார். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் பார்வையிட்டு உரிய உதவிகளை ஒரு பக்கம் வழங்கி வருகிறார்.

மற்றொரு பக்கம் எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடியும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு உணவு வழங்கிய எடப்பாடி திமுக அரசு மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு என்னவெனில், வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள தவறியதோடு,வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு தவிர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.