---Advertisement---

பள்ளிகளை திறக்க விஜயகாந்த் எதிர்ப்பு

Published on: January 29, 2022
---Advertisement---

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாத பள்ளிகள் தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான்  திறக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் கொரோனாவில் இருந்து உருமாறிய ஓமிக்ரான் பரவியதால் சில மாதங்கள் முன்பு திறக்கப்பட்டபள்ளிகள் அடைக்கப்பட்டது.

இப்போது ஓமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் வரும் பிப்ரவரி முதல் பள்ளிகளை திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கிணங்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு தேமு திக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நியோ கோவ் எனும் புது வைரஸ் பரவி வரும் நிலையில் இப்போது பள்ளிகளை திறப்பது அவசியமற்றது.

பள்ளிகள் திறப்பில் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.