தமிழில் வெண்ணிலா கபடி குழு முதல் ஈஸ்வரன் வரை பல பரபரப்பான படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். திண்டுக்கல் மாவட்டம் பழனியை பூர்விகமாக கொண்டவர் இவர்,
இவருக்கு இன்று பிறந்த நாளையொட்டி இயக்குனர் பாரதிராஜா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
தன்னம்பிக்கை,
கடின உழைப்பு,
விடாமுயற்சி,
இந்த வார்த்தைகளுக்கு
சொந்தக்காரன்.
தன் படைப்புகளில்
எனக்கான கதாபாத்திரங்களில்
மட்டுமில்லை,
நிஜவாழ்க்கையிலும்
என்னையும் ஒரு தந்தையாக போற்றும்
என் பாசத்துக்குரிய
சுசீந்திரனுக்கு இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
.
அன்புடன்
பாரதிராஜா.
இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.








