---Advertisement---

எம்.ஜி.ஆருக்கு அப்பறம் இவரு தாங்க…பெயரை எடுத்த அஜீத்!…உறுதிப்படுத்திய இயக்குனர்…

Published on: June 1, 2024
mgr ajith
---Advertisement---

‘ஆசை நாயகன்’, ‘அல்டிமேட் ஸ்டார்’, ‘தல’ என பல பட்டங்களை பெற்று அஜீத் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். அவரின் வெற்றி படங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்தது “ரெட்”. இயக்குனர் ராம் சத்யா (எ) சிங்கம் புலி இயக்கியிருந்தார் படத்தை.

இயக்குனர் என்று சொல்வதை விட நடிகர் என்று சொன்னால் தான் சிங்கம் புலியை தெளிவாக அடையாளப்படுத்த முடியும். “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் காமெடியனாக  இவர் செய்திருந்த நகைச்சுவை அதிகமாக ரசிக்கப்பட்டது.

இதே போலே நகைச்சுவை நடிப்பிற்கு பெயர் போன இவர் இயக்குனராகவும் இருந்திருக்கிறார்.

singam puli
singam puli

“ரெட்” என படத்தின் பெயர் வரக்காரணம் “இதயக்கனி” படத்தில் இரண்டாவது பாதியில் வரும் எம்.ஜி.ஆரின் பெயர் மிஸ்டர். “ரெட்”ஆம்.

இந்த பெயரை தான் தனது படத்திற்கு சூட்டியதாக “ரெட்” பட இயக்குனர் சொல்லியிருந்தார். படத்தின் டயலாக்கை வைத்து இந்த படம் தான் இது என எளிதாக அடையாளம் காணும் விதாமான வசனம் தேவைப்பட்டதாம்.

எல்லோரும் தினசரி பயன்படுத்தக்கூடிய வார்த்தையாக இருக்கக்கூடியது “அது”. ஒரு பொருளை அடையாளம் காட்ட அது வா?, அது தானே என்போம். இதனையே தனது படத்தில் அஜீத்தின் பஞ்ச் டயலாக்காவே வைக்க முடிவுசெய்தாராம். அதே போல “அது” என்ற இந்த வார்த்தையை அஜீத் படத்தில் அடிக்கடி பயன்படுத்தினாராம்.

கடைசியில் இயக்குனர் எதிர்பார்த்து போலவே இந்த வார்த்தை ஃபேமஸானதாம். அப்படியே “ரெட்” படம் என்றால் “அது” என்ற இந்த வார்த்தையும் தான் படம் பார்த்தவர்களின் மனதில் நிற்கக்கூடியதாக இருக்கும்.

படத்தின் பெயர் “ரெட்” என வைக்கப்பட்ட  காரணத்தையும், “அது” என்ற வசனத்தின் பின்னனியையும் பற்றி சிங்கம் புலி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!