சத்யா மூவிஸ் தயாரிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்று முகம். இரு வேடத்தில் ரஜினி நடித்த இப்படத்தில் ரஜினிகாந்த், ராதிகா, சில்க் ஸ்மிதா மற்றும் பலரானோர் நடித்தனர்.
ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி நடித்த பாட்ஷா டைப் மாஸ் படங்கள் போல இந்த படமும் மிகப்பெரிய மாஸ் படமாக வந்தது.
அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரியாக ரஜினி வரும் காட்சிகள் மிகுந்த மாஸ் ஆக இருந்தன.
இந்த படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்து இருந்தனர். ரஜினிகாந்த் வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், செந்தாமரையுடன் அவர் பேசும் வசனங்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.
இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் இப்படத்தை மீண்டும் டிஜிட்டலில் ரீ மாஸ்டர் செய்து வெளியிட இருக்கிறது. இதன் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இப்படம் விரைவில் வர இருப்பதாக சத்யா மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எங்கள் அபிமான #சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
To our favourite #SuperstarRajinikanth Many happy returns!மூன்றுமுகத்தில் #அலெக்ஸ்பாண்டியனாக நமது #சூப்பர்ஸ்டார் விரைவில் திரையரங்குகளுக்கு வருவார்!
See our #Superstar as #AlexPandian in theatres! pic.twitter.com/7A0SqufHlF— Sathya Movies (@sathyamovies) December 12, 2021







