---Advertisement---

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்

Published on: January 1, 2021
---Advertisement---

பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இப்படத்தின் வெற்றியால் இவர் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார். இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று இதனை துருவ் விக்ரம் உறுதி செய்தார். தானும் மாரி செல்வராஜும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம், அவருடன் இணையவுள்ளதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். இப்படம் விளையாட்டை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும் பா. ரஞ்சித் இதனை தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!