நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் நவம்பர் 4 தீபாவளி அன்று அண்ணாத்தே படம் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் இரண்டு பாடல்கள் முன்பே வெளியாகி விட்டது. தற்போது அண்ணாத்தே படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.
நாளை ஆயுத பூஜை அன்று மாலை டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் அறிவிப்பை பார்த்த நடிகர் தனுஷ், ஸ்டைலை பார்த்தாலே நல்லா இருக்கு என்னால் வெய்ட் செய்ய முடியவில்லை என கூறி இருக்கிறார்.









