தனுஷ் அமீர் இணையும் படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் அமீர் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு பேசப்பட்டது. தற்போது இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு தனுஷும் அமீரும் மீண்டும் இணைகின்றனர்.

துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வரும் மாறன் திரைப்படத்தில் தனுஷ் அமீர் இணைகின்றனராம்.

இந்த படம் இன்வெஸ்டிகேட் ஜார்னரில் தயாராகிறது. இந்த படத்தில் தனுசுடன் இயக்குனர் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மாறன் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.