---Advertisement---

இளையராஜாவுக்காக மெட்டு போட்டு கொடுத்த தேவா!… நம்ப முடியவில்லை தானே?…

Published on: May 25, 2024
ilayaraja deva
---Advertisement---

இளையராஜா தமிழ் சினிமாவின் இசையில் ஒரு மிகப்பெரிய சரித்திரத்தை படைத்து விட்டார். இப்பொழுது இசை ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரைப் பற்றி சர்ச்சைகள் இருந்தாலும் மனிதன் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என தொடர்ச்சியாக இசையமைப்பில் ஈடுபட்டு வருகிறார். இளையராஜா உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு சமகால போட்டியாளர்களாக இருந்தவர்கள் ஏ.ஆர்.ரகுமானும், தேவாவும்.

ilayaraja deva
ilayaraja deva

மேற்கத்திய வாத்தியங்களால் தனது இசை பயணத்தை தொடர்ந்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். ஆனால் இளையராஜா போலவே உள்ளூர் வாத்தியங்களை வைத்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர் தேவா. என்னதான் தனது சமகால போட்டியாளராக இருந்தாலும் தேவா புகழின் உச்சியில் இருக்கும் பொழுது இளையராஜாவை குறிக்கும் ஒரு பாட்டிற்கு தேவா இசையமைத்திருக்கிறார்.

“சோலையம்மா” படத்தில் கஸ்தூரிராஜா எழுதிய பாடலை கங்கை அமரன் பாடியிருக்க, “ராசா இளையராசா படிச்ச பாட்ட படிக்கிறேன் கேளு’. இப்படி இளையராஜா பெயரை கொண்டு துவங்கும் ஒரு பாடலுக்கு இசையமைத்து கொடுத்தது தேவா, இது இவரின் பெருந்தன்மையை காட்டுவதோடு மட்டுமல்லாமல் இளையராஜா மீது அவருக்கு இருக்கும் மரியாதையை சொல்வது போலவே அமைந்திருந்தது.

தமிழ் சினிமாவில் இது போல ஒரு கலைஞன் மற்றொரு கலைஞனை பாராட்டுவது மேடைகளில் அவ்வப்போது நடக்கும். ஆனால் படங்களில் தங்களது சம கால போட்டியாளர்களை பற்றி பஞ்ச் வசனங்கள் அல்லது இருவரிடையேயான போட்டியை தெரியப்படுத்தும் விதமான நிகழ்வுகள் இருந்திருப்பதை அதிகமாக பார்த்திருந்தாலும், தேவா செய்தது போல அனைவரும் செய்யதால் அது நிச்சயமாக சினிமா ரசிகர்களை மகிழ்ச்சிலக்கடலில் ஆழ்த்திவிடும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.