இங்கிலாந்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்குப் பிறந்த குழந்தை ஆரோக்யமாக இருப்பதாக மருத்துவர்க: தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அந்த நாட்டு இளவரசருக்கும் கொரொனா இருந்து சிகிச்சையில் குணமானார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் கொரொனா தொற்று இருந்த கர்ப்பிணி ஒருவர் இறந்துவிடவே அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர். அந்த குழந்தைக்குக் கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்ய கொரோனா இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.
இங்கிலாந்தில் இதுவரைக் கொரோனாவுக்கு 60000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கே இறப்பு எண்ணிக்கை 7097 ஆக உள்ளது.







